அஜித்தின் 44-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிம்பு, தமன், அனிருத் ஆகிய பிரபலங்கள் ரசிகர்களுக்கு மெகா ட்ரீடை கொடுத்துள்ளனர். அஜித் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர்.
அஜித் ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் தல 56 படத்தின் ஓபனிங் பாடலை தயார் செய்து விட்டதாக டுவிட் செய்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
நேற்று டுவிட்டரில் அஜித் பிறந்தநாளுக்கு தன் வாழ்த்துக்களை கூறிய அனிருத், அஜித்தின் ஓப்பனிங் பாடல் மற்றும் தீம் மியுஸிக் ரெடியாகி விட்டதாக கூறினார். இதை கண்ட அஜித் ரசிகர்கள், பட்டைய கிளப்புங்க என்றும், தாரை தப்பட்டை கிழியப்போகுது என்றும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
அதேபோல் நடிகர் சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த வாரம் வெளியாகவுள்ள ‘வாலு’ படத்தின் இரண்டாவது டிரைலரை இன்று வெளியிட இருக்கிறாராம். இதில் ஸ்வாரசியமான விஷயம் என்னவென்றால் அஜித் குறித்து சில காட்சிகள் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளதாம். இது சிம்பு அஜித்திற்கு தரும் பிறந்தநாள் பரிசு என்று கூறப்படுகிறது.
மேலும், இசையமைப்பாளர் தமனும் அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இவர்களைப் போல பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தவுள்ளனர்.
தல பிறந்தநாளில் தலைகவசம் அணிந்து பைக் ஓட்டி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மேலும் அஜித்தின் பிறந்தநாளுக்கு திரை உலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
No comments:
Post a Comment