பிரிட்டனில் வரும் மே 7ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கிலாந்தின் 650 தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலில் 4.8 மில்லியன் மக்கள் பங்கேற்க உள்ளதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த தேர்தலில், தேர்தல் களத்தில் பணியாற்றுவதற்காக, 3,500 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், இருவர் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களாம்.
இலங்கையின் முன்னாள் அமைச்சர்களான இம்டியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு ஆகியோர் இந்தப் பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக அவர்கள் நாளை லண்டன் புறப்பட்டுச் செல்ல இருக்கின்றனர். பொதுநல நாடுகள் அமைப்புச் செயலகம் இலங்கை அரசிடம் கேட்டுக் கொண்டதற் கிணங்க இவர்கள் இருவரும் இலங்கை அரசாங்கம் இவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்ப உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment