Friday, 1 May 2015

பேஸ்புக்கில் 'லைக்' கொடுத்து மாட்டிக்கொண்ட திருடன்!!


போலிஸாரால் தேடப்படும் நபர் ஒருவரின் புகைப்படத்தை இணையத்தில் போலிஸார் வெளியிட்டபோது அப்படத்துக்கு அந்நபரே 'லைக்' கொடுத்த நிலையில் அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
23 வயதான லெவி சார்ள்ஸ் ரியர்டன் எனும் இந்த நபர், திருட்டு மற்றும் மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக போலிஸாரால் தேடப்பட்டு வந்தார். கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் தலைமறைவாகியிருந்தார். அதனால் அவரை மீண்டும் கைது செய்வதற்கு இரு தடவைகள் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பின், அவரின் புகைப்படத்தை போலிஸார் பேஸ்புக் பக்கமொன்றில் வெளியிட்டனர்.
அதன்பின் பேஸ்புக்கில் தனது புகைப்படத்தைக் கண்ட லெவி சார்ள்ஸ், வழக்கம் போல அப்படத்துக்கும் 'லைக்' கொடுத்தாராம். இதன்மூலம் அவரின் இருப்பிடத்தை அறிந்த போலிஸார் எளிதாக கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment