'ஐ' படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்க உள்ள அடுத்த படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும், இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ 200 கோடி எனவும் செய்திகள் வெளியாகின. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு குறித்தும் இந்தப் படம் எந்திரன் 2 ஆ அல்லது வேற படமா என்பது குறித்தும் இன்று தெரிந்துவிடும் என்கிறார்கள்.
மேலும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து ஐங்கரனும் தயாரிக்க இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். ரஜினியின் எந்திரன் படத்தின் முதல் தயாரிப்பாளரும் ஐங்கரன்தான். பின்னர்தான் அந்தப் படம் சன் பிக்சர்ஸ் கைக்குப் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment