லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தில் இரு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார் கமல்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாக இருந்த இப்படம் நிதி பிரச்சினையால் இன்று ரிலீஸாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் வெளிநாடுகளில் நேற்றே இப்படத்தை பார்த்து உள்ளனர் சில ரசிகர்கள். படத்தை பார்த்த அவர்கள் டுவிட்டரில் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இதில் முக்கால் வாசி பேர் படம் போரடிப்பதாகவும், ரசிகர்களை சோதிக்கும் படமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். படத்தை பார்த்த வெளிநாட்டு ரசிகர்களின் படம் பார்த்த வெளிநாட்டு ரசிகர்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்ட விமர்சனங்கள் இதோ உங்கள் பார்வைக்காக…
பார்த்திபன் பத்மநாபன்…“படம் பார்க்க பொறுமை தேவை. படம் நீளமாக இருக்கிறது. ஓகே ஒன் டைம் பார்க்கலாம்”
ப்ரியா நட்ராஜ்…“கமலுக்காக பார்க்கலாம். ஜிப்ரனின் பின்னணி இசை ஓகே. மற்றவை கொஞ்சம் யோசிக்கனும்”
முத்தையா சிவசுப்ரமணியன்…#உத்தமவில்லன். அனைத்தும் கலந்த அருமையான சமையல். அருமையாக தந்து விட்டார் கமல். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ராஜவேல் இளங்கோவன்…“கமலின் காமெடி கலக்கல். ஆனால் நிறைய பாடல்கள் இருப்பதால் படம் சோதிக்கிறது.”
கார்த்திக் கேசவன்…“இது கமல் படம். இதான் மாஸ். மத்தது எல்லாம் துஸ்.”
ஆனந்தி முருகேசன்…“நிறைய எதிர்பார்த்து வந்தோம். இன்னும் பெட்டராக கொடுத்து இருக்கலாம்.”
கார்த்தி டிகே.. படம் மொக்க, ரொம்ப எதிர் பார்த்து வந்தேன்.. எல்லாம் வேஸ்ட்
No comments:
Post a Comment