Friday, 22 May 2015

6 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் விளையாடி வென்ற பாகிஸ்தான்!!


நேற்று நடைபெற்ற டி20 ஆட்டத்தில் ஜிம்பாவேயை பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வெளிநாட்டு அணி (ஜிம்பாவே) பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நேற்று லாகூரின் கடாஃபி மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாவே அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக சிகும்புரா 54 ரன்களும், மசகட்சா 43 ரன்களும் எடுத்தனர். அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அந்த அணியில் முக்தார் அகமத் 83 ரன்களும், ஷேசாத் 55 ரன்களும் எடுத்தனர்.
2 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் பாகிஸ்தான் முதல் போட்டியில் வென்று முன்னணியில் இருக்கிறது. நேற்று போட்டி நடைபெற்ற மைதானத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படிருந்தது.

No comments:

Post a Comment