கமல் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் இன்று வெளியாக இருந்த உத்தமவில்லன் திரைப்படத்தின் காலை காட்சிகள் திடீரென நிறுத்தப்பட்டது. படத்தயாரிப்பாளருக்கும் பணம் கொடுத்த ஃபைனான்சியருக்கும் ஏற்பட்ட சில பிரச்சினையால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்பட்டு அடுத்த காட்சிகள் திரையிடப்படுமா என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திராவிலும் காலை கட்சிகள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் காலையில் இருந்து கமல் படத்தை பார்க்க ஆர்வமாக இருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையடுத்து, உத்தம வில்லன் படப்பிரச்னை தொடர்பாக தயாபரிப்பாளர், விநியோகஸ்தர்கள், ஃபைனான்சியர்கள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூகமான முடிவு ஏற்பட்டுள்ளது. இதனால் படம் இன்று மாலை 6 மணிக்கு மேல் வௌியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment