ஆந்திராவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தன் காதலியுடன் இருந்ததை, வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்வதற்காக தேடி வருகின்றனர்.
விஜயவாடாவின், பாயகாபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயது வாலிபர் சேசு. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவரும் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும், யாருக்கும் தெரியாமல் அடிக்கடி, தனியாகச் சந்திப்பது, எல்லை மீறுவது என அடிக்கடி செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு முறை, இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்தை வீடியோ எடுத்து வாட்ஸாப்பில் தன் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். நண்பர்கள் மூலம், வாட்ஸப்பில் இந்த வீடியோ வெகுவிரைவாகப் பரவத் தொடங்கியது.
இந்தத் தகவல் எப்படியோ, பாரத மகளிர் அமைப்பினருக்கு தெரிந்துள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அந்த வாலிபரை கைது செய்ய வேண்டும் என்றும் பாயகாபுரம் காவல்துறையினரிடம் புகார் செய்தனர் பாரத மகளிர் அமைப்பினர்.
இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறை ஆய்வாளர் சகேராபேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வீடியோவை வைத்து சேசுவைத் தேடி வருகின்றனர் காவல் துறையினர்.
ஆனால், இந்த போலீஸ் மேட்டர் தெரிந்த சேசு தலைமறைவாகி விட்டாராம். இவரை இப்போது வலை வீசித் தேடி வருகிறதாம், சகேராபேகம் தலைமையிலான குழு.

No comments:
Post a Comment