Saturday, 21 February 2015

ஒரு மணி நேரத்தில் 1585 பனி மனிதன்...!


ஜப்பானிலுள்ள சிறிய நகரமொன்று, பனி மனிதன் உருவாக்குவதில் புதிய உலக சாதனை படைத்துள்ளது. லியாமா எனும் இந்நகரில் கடந்த திங்களன்று ஒரு மணி நேரத்தில் 1585 பனிமனிதன் சிற்பங்களை உருவாக்கியதாக அந்நகரின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்கள் உட்பட சுமார் 600 பேர் இணைந்து தலா 3 அடி உயரமான இப்பனிமனித சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு மணி நேரத்தில் 306 பனிமனிதர்களை செய்து படைக்கப்பட்டிருந்த சாதனை ஜப்பானின் லியாமா நகர மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்படுவதற்காக இப்பனிமனிதன் சிற்பங்கள் முகத்தின் அங்கங்கள், கைகள் ஆகியவற்றை கொண்டதாக அமைக்கப்பட்டிருந்தன.
இம்முறை ஜப்பானின் பல நகரங்களில் அதிக பனிப்பொழிவு ஏற்பட்டது. ஹொக்கெய்டோ எனும் நகரில் 180 சென்ரிமீட்டர் அளவு பனிப்பொழிவு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment