சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் நன்னடத்தை போலிஸாரால் முழுமையாக உடலை மூடி ஆடையும் முகத்திரையும் அணிந்த பெண் ஒருவர், அவரது கண் பகுதி வெளியில் கூடியளவு தெரிந்தமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாட்டின் கிழக்குப் பகுதியில் அல்புஹமல் நகரில் வைத்து மேற்படி பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிராந்திய தொண்டு ஸ்தாபனமான அல்--மேர்செட் தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய நேஷனல் நியூஸ் ஊடகம் அறிக்கையிட்டுள்ளது.
இதன்போது அவர் கைதுசெய்யப்படுவதைத் தடுக்க முயற்சித்த இரு ஆண்களும் கைதுசெய்யப்-பட்டுள்ள னர். சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள பிராந்தியங்களில் ஆடை அணிவது தொடர்பில் கடுமையான விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் அங்கு பெண்ணொருவர் எங்கு செல்வதானாலும் ஆண் பாதுகாவலர் ஒருவ ருடனேயே செல்ல வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment