தாய்லாந்திலுள்ள இளைஞர்கள் பெரிய ஆணுறைகளை வாங்குவதை தவிர்க்குமாறு அந்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. தாய்லாந்தில் டீன் ஏஜ் இளைஞர்கள் கடைகளுக்குச் சென்று பெரிய அளவிலான ஆணுறைகளை வாங்குவது வழக்கமாக உள்ளதாம்.
"எக்ஸ்ட்ரா லார்ஜ்" அளவானவை உள்ளதா எனவும் சிலர் கேட்கிறார்களாம். ஆனால், இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துமாறு இளைஞர்களை தாய்லாந்து அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
தமது சக நண்பர்களை வியக்கவைப்பதற்காக பெரிய ஆணுறைகளை இவர்கள் வாங்குகின்றனராம். ஆனால், அவை மேற்படி இளைஞர்களுக்கு பொருந்தாமல் உள்ளதால், பாலியல் உறவின்போது இவற்றை பயன்படுத்தும் இளைஞர்கள் தொற்றுநோய்களின் தாக்கத்துக்குட்படலாம் என தாய்லாந்தின் பொதுச்சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மைக்காலத்தில் இளம்பருவத்தினரிடையே பாலியல் மூலம் தொற்றும் நோய்களின் பரவல் அதிகரித்திருப்பதை வெளிப்படுத்தும் புள்ளிவிபரங்களையும் மேற்படி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதேவேளை இவ்வருடம் பொருத்தமான அளவுடைய 43 மில்லியன் ஆணுறைகளை இலவசமாக விநியோகிப்பதற்கும் தாய்லாந்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

No comments:
Post a Comment