அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை உள்ளடக்கிய கிழக்கு கடற்கரைப் பிராந்தியத்தில் உறை குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. அமெரிக்க கென்துக்கி பிராந்தியத்தில் புதன்கிழமை வெப்பநிலை மோசமாகி வீழ்ச்சியடைந்ததையடுத்து நயாகரா நீர்வீழ்ச்சியானது உறைந்து பனிக்கட்டியாக மாறியுள்ளது.
அமெரிக்காவின் சில பிராந்தியங்களில் மணிக்கு 40 மைல் வேகத்தில் குளிர் காற்று வீசி வருகிறது. போஸ்டன் நகர் இந்த பனிப்புயலால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜோர்ஜியா, வட கரோலினா, தென் கரோலினா மற்றும் தென்னஸி ஆகிய பிராந்தியங்களில் 330,000 பேர் மின்சாரமின்றி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பனிப்புயல் காரணமாக தென்னஸியில் மூவரும் வேர்ஜினியாவில் இருவரும் வட கரோலினா, கன்ஸாஸ் பிராந்தியங்களில் தலா ஒருவரும் பலியாகியுள்ளனர். அதேசமயம் அமெரிக்க நியூயார்க் நகரும் மோசமான குளிர் காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. கென்துக்கியில் 18 அங்குல பனிப்பொழிவு இடம்பெற்றுள்ளது.
அர்கன்ஸாஸ் மாநிலத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனையை நோக்கி கணவருடன் சென்ற லோரன் அடம்ஸ்கி என்ற பெண், பனிப்பொழிவால் அவர் பயணித்த டிரக் வண்டி நகர முடியாத நிலை ஏற்பட்டதால் அந்த வண்டியிலேயே குழந்தையை பிரசவித்துள்ளார். பிறந்த குழந்தைக்கு பிரனென் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment