நம் தலைமுறையினரிடம் கையில் காசு இல்லாமல் கூட பார்க்க முடியும், ஆனால் மொபைல் ஃபோன் இல்லாமல் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு செல்ஃபோன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
எனினும் இவற்றில் பெரும்பாலும் பிரச்சனைகள் ஏற்படுவது நம்மால் தான் என்றே கூறலாம். இடைவிடாமல் பயன்படுத்துவது. கீழே போடுவது, போன்று நம் ஃபோனை நாமே பாழாக்குகின்றோம். இவற்றையெல்லாம் விட மிக முக்கிய பிரச்சனை தண்ணீரில் போட்டுவிடுவது. இது ஒரு எலெக்ட்ரானிக் பொருள் என்பதால் தண்ணீருக்கும் இதுக்கும் ஆகவே ஆகாது.
எனவே ஃபோனை தண்ணீரில் போட்டால் நாம் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பதைக் காணலாம்…
என்ன செய்யக் கூடாது??
உங்கள் மொபைல் தண்ணீரில் விழந்து எடுத்த உடன்.. அதனை பயன்படுத்தவே கூடாது. குறிப்பாக அணைந்து விட்டால் அதனை ஆன் செய்ய முயற்சிக்க கூடவே கூடாது.
கீகள் உள்ள ஃபோன் எனில் அதில் உள்ள எந்த ஒரு கீயையும் அழுத்தக் கூடாது.(ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் நிலையில் கூட)
அதேபோல ஃபோனை ஷேக் செய்யக் கூடாது. அது ஆபத்தில் முடியலாம்.
சில அதிமேதாவிகள் ஃபோனை பார்ட் பார்ட்டாக கழற்றி வெயிலில் உளர வைத்து விடுவார்கள் இது மிகவும் தவறு.
சிறிது நீர் அங்கு இருக்கின்றதே என்று அதனை வாயால் ஊதக் கூடாது. அதனால், நீர் போகாத இடத்திற்கு கூட செல்ல வாய்ப்புகள் உண்டு.
என்ன செய்ய வேண்டும்??
ஃபோன் ஆனில் இருந்தால் சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டும்.
பின்னர் ஃபோனின் சிம் மற்றும் மெமரி கார்டுகளைக் கழட்ட வேண்டும்.
பின்பு பேட்டரியைக் கழட்டி விடவும்.
மென்மையான துணி ஒன்றின் மூலம் ஃபோனில் உள்ள ஈரத்தினை துடைத்து எடுக்கவும்.
வாக்யூம் க்ளீனர் கொண்டும் தண்ணீரை உறிஞ்சு எடுக்கலாம்.
இல்லையெனில், அரிசி பையில் உங்களது ஃபோனை போட்டு வைக்கவும். அரிசிக்கு தண்ணீரை ஈர்க்கும் சக்தி உள்ளதாம்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் ஃபோனை மீண்டும் பயன்படுத்த வேண்டும்.
ஆன் செய்தவுடன் மொபைலில் அனைத்து வசதிகளையும் செக் செய்து பார்க்கவும்.
அப்படியும் ஒர்க் ஆகவில்லை என்றால் சர்வீஸ் சென்டர் தான் எடுத்து செல்ல வேண்டும்.

No comments:
Post a Comment