உலகக் கோப்பை 2015 ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றுவரை 11 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. இதில் 11வது ஆட்டமான ஆஸி மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டி மட்டும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
நாளை (பிப்.,22) இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. குரூப் ஏ-யில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி டுனேடின் மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 3 மணி அளவில் நடைபெறும். இதில் இரு அணிகளுமே முதலில் விளையாடிய போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. எனவே இரு அணிகளும் முதல் வெற்றிக்காக கடினமாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப் பி-யில் இந்தியா மற்றும் தென்னாப்ரிக்க அணிகள் மோதும் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9 மணி அளவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இரு அணிகளும் விளையாடிய முதல் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன என்பதால் தங்களின் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள கடுமையாக போரடும்.
மேலும் இதுவரை தென்னாப்ரிக்காவை மூன்று முறை உலகக் கோப்பை போட்டியில் எதிர்கொண்டுள்ள இந்திய அணி மூன்று முறையும் தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment