உலகக் கோப்பை போட்டியின் எட்டாவது லீக் ஆட்டத்தில் யுஏஇ அணியை ஜிம்பாவே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாஸ் வென்ற ஜிம்பாவே அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய யுஏஇ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அன்வர் 67 ரன்களும், குர்ராம் கான் 45 ரன்களும் எடுத்தனர்.
286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாவே அணி, 48 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஜிம்பாவேயின் SC வில்லியம்ஸ் ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் பலம் சேர்த்தார். மேலும், ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாளை நடக்கவிருக்கும் 9வது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும், இங்கிலாந்து அணியும் மோத உள்ளன.

No comments:
Post a Comment