அமெரிக்காவின் பிரபல மாடல்களில் ஒருவரான கோல் கர்தாஷியனின் (Khloe Kardashian) உண்மையான தந்தை புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரான ஓ.ஜே.சிம்ஸன் (OJ Simpson) தான் எனக்கூறி நடிகையும் மாடலுமான அம்பர் ரோஸ் (Amber Rose) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
பிரபல மாடல் கிம் கர்தாஷியனின் இளைய சகோதரிகளில் ஒருவரான கோல் கர்தாஷினுக்கும் நடிகையும் பாடகியுமான அம்பர் ரோஸுக்கும் இடையில் அண்மைக் காலமாக மோதல் நீடித்து வருகிறது. அடிக்கடி இருவரும் பகிரங்க வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அம்பர் ரோஸ் வெளியிட்ட டுவிட்டர் தகவல் ஒன்றிலேயே கோல் கர்தாஷியனின் தந்தை குறித்த சர்ச்சையை கிளப்பியுள்ளார். அமெரிக்காவின் மிகப் பிரபலமான கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக விளங்கியவர் ஓ.ஜே. சிம்ஸன். ஆனால், 1994 ஆம் ஆண்டு தனது முன்னாள் மனைவியான நடிகை நிகோல் பிரவுணையும் நிகோலின் காதலரையும் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளானார் ஓ.ஜே.சிம்ஸன்.
இது தொடர்பான வழக்கில் ஓ.ஜே.சிம்ஸன் சார்பில் வாதாடியவர்களில் ஒருவர் ராபர்ட் கர்தாஷியன். அவ்வழக்கில் ஓ.ஜே. சிம்ஸன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் வியப்புக்குரிய வகையில் அவர் விடுதலையானார். இந்த வழக்கின் மூலம் வழக்கறிஞர் ராபர்ட் கர்தாஷியன் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்த வழக்கறிஞர் ராபர்ட் கர்தாஷியனுக்கும் கிறிஸ் என்பவருக்கும் பிறந்த பிள்ளைகளே கிம் கர்தாஷியன், கோல் கர்தாஷியன் மற்றும் கோர்ட்னி கர்தாஷியன் சகோதரிகளும் இவர்களின் சகோதரர் ரொப் கர்தாஷியனும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகோல் பிரவுணும் காதலரும் கொல்லப்படுவதற்கு முன்னரே 1991 ஆம் ஆண்டு ராபர்ட் கர்தாஷியனும் கிம் கர்தாஷியனும் விவாகரத்து பெற்றிருந்தனர்.
பின்னர் அமெரிக்காவின் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான புரூஸ் ஜென்னரை கிறிஸ் திருமணம் செய்தார். புரூஸ் ஜென்னர் - கிறிஸ் ஜென்னர் தம்பதிகளின் மகள்களே கெய்லி ஜென்னர், கெண்டல் ஜென்னர் சகோதரிகளாவர். இவர்களின் தந்தை தான் புரூஸ் ஜென்னர் பெண்ணாக மாறியுள்ளமையும் அண்மையில் அவர் ஓட்டிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியதால் பெண்ணொருவர் உயிரிழந்தமையும் மெட்ரோ நியூஸ் வாசகர்கள் அறிந்த விசயங்கள்.
இப்பின்னணியில் கோல் கர்தாஷியனின் உண்மையான தந்தை ராபர்ட் கர்தாஷியன் அல்லர், கால்பந்தாட்ட நட்சத்திரமான ஓ.ஜே.சிம்ஸன்தான் அவரின் தந்தை என நடிகை அம்பர் ரோஸ் கூறியுள்ளார். கெய்லி ஜென்னர் குறித்து அம்பர் ரோஸ் கூறிய கருத்தொன்றே அவருக்கும் கோல் கர்தாஷியனுக்கும் புதிய மோதல் ஏற்படுவதற்கு வழிவகுத்தது.
17 வயதான கெய்லி ஜென்னர் வளர்ந்து வரும் மாடல்களில் ஒருவராக விளங்குகிறார். இந்நிலையில் கெய்லி ஜென்னர் ஒரு குழந்தை. அவர் இரவு 7 மணிக்கு உறங்கச் சென்றுவிட வேண்டும் என பேட்டி ஒன்றில் அம்பர் ரோஸ் கூறினார். இக்கருத்து கோல் கர்தாஷியனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது.
பதிலுக்கு, அம்பர் ரோஸ் 15 வயதிலேயே துகிலுரி நடனமாட ஆரம்பித்தவர் என கோல் கர்தாஷியன் கூறினார். அப்போதிலிருந்து கோல் கர்தாஷியனும் அம்பர் ரோஸும் பகிரங்க வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை கர்தாஷியன் சகோதரிகளுடன் அம்பர் ரோஸ் முரண்படுவதற்கு மற்றொரு காரணமும் இருக்கலாம்.
கர்தாஷியன் சகோதரிகளில் மூத்தவரான கிம் கர்தாஷியன் பிரபல பாடகர் கென்யே வெஸ்ட்டை திருமணம் செய்துள்ளார். கென்யே வெஸ்ட்டின் முன்னாள் காதலிகளில் ஒருவர் அம்பர் ரோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment