இளம் பெண் ஒருவர் வாங்க வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்க…. இவ்வாறு ஒரு இளம் பெண் வெளிப்படையாகக் கூப்பிடுமாறு ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கடந்த சில வாரங்களாக உலா வரும் இந்த வீடியோ, ஆக்டிவ் இல்லியூசன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக யூடியூபில் நுழைந்துள்ளது. இந்தியாவில், ஊடகங்களில் சொல்ல முடியாத அளவுக்கு பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது.
ஒரு நாளைக்கு 57க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில், இந்திய அளவில் மிகப் பெரிய சம்பவங்களாக கருதப்படுவது, கற்பழிப்புக் குற்றங்கள் தான்.
நாளடைவில் இவை மிகவும் அதிகமாகி விட்டன. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெண்மணிகள் வரை அனைவருமே இந்த கோரச் சம்பவங்களுக்கு ஆளாகின்றனர் என்பது தான் வேதனை.
2001ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலத்தில் 28 மாநிலங்களில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 130 பலாத்கார சம்பவங்கள் புகார்களாக பதிவு செய்யப்பபட்டுள்ளன.
இது தவிற இன்னும் புகார் அளிக்கப்படாமலும், பஞ்சாயத்துக்களால் தீர்த்து வைக்கப்பட்ட சம்பவங்களும் ஏராளமாக உள்ளன. இவற்றிற்காக எவ்வளவோ விழிப்புணர்வுகளும், புதிய வழிமுறைகளும் புகுத்தப்பட்டு வந்தாலும், கற்பழிப்புச் சம்பவங்க தொடர்கதையாகவே இருந்து வருகின்றன.
தொடர்கதையாகி விட்ட இந்த கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகத் தான் இந்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் மாதுரி தேசாய் என்ற இளம்பெண், கற்பழிப்பவர்களை மிகவும் வன்மையாக திட்டித் தீர்துள்ளார்.
வீடியோவில் ஹிந்தியில் பேசும் அவரது பேச்சு கீழே தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது:
வாருங்கள் வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள். பேருந்து நிலையம், கோவில், பஜாரில் பலாத்காரம் செய்யுங்கள். நான் தெருவில் தனியாக செல்கிறேன்.
அது எப்படி உங்கள் சகோதரி இறுக்கமாக ஆடை அணியலாம். உங்களின் கோபம், விரக்தியை பிற பெண்களிடம் காட்டுகிறீர்கள். வாருங்கள், வந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள்.
நான் உங்கள் டாக்சியில் வருகிறேன் என்னை பாலியல் பலாத்காரம் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
வீடியோவின் எதிரொலி
இந்த வீடியோவிற்கு இணையத்தில் ஃபேன்ஸ் பலர் உருவாகி இருந்தாலும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. இது போன்ற வீடியோக்கள், ஆண்களை அச்சமின்றி பலாத்காரம் செய்யத் தூண்டலாம் என்பது விமர்சகர்களின் கருத்து.
வீடியோ கீழே
.jpg)
No comments:
Post a Comment