Tuesday, 3 February 2015

பாலாவையே அழ வச்ச வரலட்சுமி..!


பொதுவாக நடிப்பவர்களை தான் பாலா அழ விடுவார். ஆனால் இயக்குநர் பாலாவையே படப்பிடிப்பில் அழ வைத்திருக்கிறார் வரலட்சுமி. ‘பரதேசி’ படத்திற்கு அடுத்து பாலா இயக்கும் படம் ‘தாரை தப்பட்டை’.
கரகாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இப்படத்தில் சசிகுமார் ஹீரோவாகவும், வரலட்சுமி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். நாதஸ்வர கலைஞராக நடிக்கும் சசிகுமாருக்கு இப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார். வரலட்சுமி கரகாட்ட நடனக்கலைஞராக நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது வரலட்சுமியின் நடிப்பை பார்த்து இயக்குநர் பாலா, கண்ணீர் விட்டதாகவும், அவருக்கு விலையுயர்ந்த கை கடிகாரம் மற்றும் தங்க சங்கிலியை பரிசளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவை இரண்டும் ரூ.1.5 லட்சம் மதிப்பிலானது என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் வரலட்சுமியை வில்லன்கள் சித்திரவதை செய்வது மாதிரியான ஒரு காட்சியை இயக்குநர் பாலா சமீபத்தில் படமாக்கியுள்ளார். இந்த காட்சியில் நடிக்கும்போது வரலட்சுமியின் தோள்பட்டை எலும்பு நழுவி விட்டதாம். இருந்தாலும், அந்த வலியை பொருட்படுத்தாமல் அந்த காட்சியில் நடித்து கொடுத்துள்ளார் வரலட்சுமி.
அதோடு, அடுத்த நாள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு, குறிப்பிட்ட காட்சியில் நடித்துக் கொடுத்தாராம். இந்த செய்தி படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் பாலாவின் காதுக்கு சென்றிருக்கிறது. இதைக்கேட்டதும் கண்கலங்கி விட்டாராம் பாலா.
உடனே வரலட்சுமியை நேரில் அழைத்து விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். மேலும், தங்க சங்கிலி ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார். மேலும் இந்த படத்தின் மூலம் வரலட்சுமிக்கு தேசிய விருது கிடைப்பது நிச்சயம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment