டெல்லி சட்டசபைத் தேர்தலில் கலந்து கொள்ளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, தங்கள் கட்சி செலவுகளுக்கு நன்கொடையாக பெறும் பணம் முறைகேடா முறையில் பெற்றுள்ளனர் என்று குற்றம் கூறியுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகியவர்கள், ஆம் ஆத்மி தன்னார்வ அமைப்பு என்ற பெயரில் தனித்து இயங்கி வருகின்றனர். அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
‘ஆம் ஆத்மி கட்சிக்கு சென்ற வருடம் நன்கொடை கொடுத்த நிறுவனம் போலியான ஒரு நிறுவனம். அதற்கு வருமானமே இல்லை. அந்த நிறுவனம் எந்தவித தொழில் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை, அப்படியிருக்க அவர்கள் எப்படி நன்கொடை கொடுக்க முடியும்’ என்று கூறியுள்ளனர்.
மேலும், அவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு நன்கொடை கொடுத்தாக சில நிறுவனங்களின் பெயரையும் வெளியிட்டுள்ளர். இது குறித்து நடிவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனை ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மறுத்துள்ளார்.

No comments:
Post a Comment