Tuesday, 3 February 2015

எப்போதுமே விஜய் தான் ஃபர்ஸ்ட்.. சொன்னது யார்..?


தமிழ் திரையுலகில் நடிப்பு, டான்ஸ் இரண்டிலும் பட்டையைக்கிளப்பக் கூடியவர் விஜய். தமிழ் சினிமா டான்ஸ் மாஸ்டர்கள் அனைவரும் புகழ்வது விஜய்யை தான். அவருடைய டான்ஸ் பற்றி சொல்ல வேண்டியது இல்லை.. பின்னி பெடலெடுத்துடுவார்.
இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நடன இயக்குநர்களான பிருந்தா மற்றும் காயத்ரி ரகுராம் இருவரும் டான்ஸில் யார் பர்ஸ்ட்.. யார் யாருக்கு எத்தனை மார்க் என்று கூறியுள்ளனர். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர் பிருந்தாவும், காயத்ரி ரகுராமும்.
அப்போது தொகுப்பாளர் நடிகர்களின் நடனத்திற்கு மார்க் போடுமாறு கூறினார். இதற்கு இருவரும் தனுஷுற்கு 9 மார்க், அஜித்துக்கு 7 மார்க், விஷால் மற்றும் சூர்யாவுக்கு 6 மார்க், ஆர்யாவுக்கு 3 மார்க் என வரிசைப்படுத்தினார். உடனே தொகுப்பாளர் விஜய்க்கு மார்க் கொடுக்கவே இல்லையே என்று கேட்டதற்கு அவர் தாங்க முதல் இடம்.. எத்தனை மார்க் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள் என்றனர்.

No comments:

Post a Comment