Tuesday, 3 February 2015

இந்தியாவில் வெளியாகும் Mercedes-Benz டீசல் எஞ்சின் C-கிளாஸ்…


கடந்த வருடம் தனது CLA மாடலின் பெட்ரோல் எஞ்சின் காரை வெளியிட்ட மெர்சிடீஸ் அதன் சி கிளாஸ் டீசல் வெர்ஷனை வெளியிட தயாராகிவிட்டது.
ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் கடந்த வருடம் தனது மெர்சிடீஸ் CLAவை அறிமுகப்படுத்தியது. இந்த மாடலின் பெட்ரோல் வெர்ஷன் நல்ல வரவேற்ப்பை பெற்றது. எனினும் டீசல் பதிப்பையே அனைவரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர்(இந்தியர்கள்).
இந்நிலையில் பிப்ரவரி 11-ல் இந்தியாவில் இதன் டீசல் எஞ்சின் மாடல் வெளியாகும் என அந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்படுள்ளது.
இந்த பென்ஸ் C கிளாஸ் மாடல், 2.2லிட்டர் பெட்ரோல் எஞ்சீனுடன் வருகிறது. மேலும், இது 170bhp ஐ தோற்றுவிக்கக் கூடியது. இந்த மாடல் 7 கியர் வேகத்தில் இயங்கும். இந்த மாடலானது, Audi A4 மற்றும் BMW 3 போன்ற மாடல்களை விட சற்றே அதிக விலையுடன் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment