கோலிவுட்டில் தொடை அழகி என்றாலே தெரியும் அது ரம்பா தான் என்று. அவர் திரையுலகில் அறிமுகமான போது பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்துவந்தார்.
இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு கனடா தொழில் அதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டார். தற்போது கணவருடன் டோரண்டோவில் வசித்து வரும் ரம்பாவிற்கு சென்னையிலும், ஆந்திராவிலும் வீடுகள் உள்ளன.
இதில் ஆந்திராவில் உள்ள இவரது வீட்டில் 4.5கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நகைகளை தனது மனைவியின் குடும்பத்தினர் திருடிச்சென்றுவிட்டதாக ரம்பாவின் சகோதரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: எனது தங்கை ரம்பாவின் நகைகளை வீட்டில் வைத்து இருந்தேன். அவற்றை காணவில்லை. கொள்ளை போன நகைகளில் மதிப்பு ரூ.4.5 கோடி ஆகும். நகைகளை என் மனைவி பல்லவி குடும்பத்தினர் திருடி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
பல்லவியுடனும், அவரது குடும்பத்தினருடனும் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. ஏற்கனவே அவர்கள் ரம்பா மீதும் என் மீதும் பொய் புகார் அளித்திருந்தனர். என்னிடம் ரூ.1 கோடி கேட்டு நிர்பந்தமும் செய்து வந்தார்கள். இந்த நிலையில்தான் ரம்பாவின் நகைகள் காணாமல் போய் உள்ளன. நகைகளை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தனது மனுவில் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment