திரையுலகிற்கு வந்த சில வருடங்களிலேயே தமிழ் சினிமாவின் ஜாம்பவன்களான ரஜினி, கமலை முந்தியுள்ளாராம் தனுஷ். தமிழ், இந்தி இரு மொழிகளிலும் நடித்து வருப்பவர் தனுஷ்.
பொதுவாகவே தமிழ், இந்தி இரு மொழிகளிலும் வெற்றிக் கொடி நாட்டிய நடிகர்கள் குறைவுதான். ரஜினி சில இந்திப் படங்களில் நடித்திருந்தாலும் கமல்தான் இந்திப்பட ரசிகர்களுக்கு நெருக்கமானவராக இருந்தார். ஆனால் அதெல்லாம் அப்போ.. இப்போது அவருக்குப் பிறகு தமிழ், இந்தியில் அதிக ரசிகர்களை பெற்றிருப்பவர் தனுஷ்தான, ராஞ்சனா என்ற ஒரேயொரு இந்தி படம்தான் நடித்தார்.
அப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து தனுஷை அனைவரிடமும் அறிமுகப்படுத்தியது. அதற்கு பிறகு அவர் நடித்துள்ள ஷமிதாப் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. படத்தில் அவரது நடிப்பை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தப் படத்தின் அறிமுகவிழா டெல்லியில் நடந்தது.
இதில் கலந்து கொள்ள வந்த அமிதாப், தனுஷ், அக்ஷராஹாசன் ஆகியோரைக் காண கூட்டம் முண்டியடித்ததில், அந்தப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஷமிதாப் வெளிவந்தால் இந்திப்பட உலகில் முக்கியமான இடத்தை தனுஷ் பிடிப்பார் என மும்பை ஊடகங்களே கூறுகின்றன. இந்தி திரையுலகில் ரஜினி, கமலை முந்திட்டாரே தனுஷ்..

No comments:
Post a Comment