Tuesday, 3 February 2015

போலி சிறிசேனவுக்கு அரச செலவில் பயிற்சி: மோசடி அம்பலம்..!


ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன போன்ற உருவ ஒற்றுமை கொண்டிருந்த ஆர்.ஏ. சிறிசேன எனும் நபரை கடந்த அரசு களமிறக்கியதோடு மாத்திரமல்லாமல் இறுதி நேரத்தில் மாதிரி வாக்குச் சீட்டுக்கள் மூலம் குழப்பத்தையும் அதேவேளை தேர்தல் தினத்தன்று மஹிந்த ராஜபக்சவுடன் ஆர்.ஏ சிறிசேன நடந்து செல்வது போன்று பிரச்சாரங்களும் செய்யப்பட்டன.
தற்போது இதன் பின்னணியில் ரூபவாஹினி செயற்பட்டிருப்பதும் அவருக்கு அதற்கான பயிற்சியும் அரச செலவிலேயே ரூபவாஹினி நிபுணர்களால் வழங்கப்பட்டுள்ளமை பற்றியும் விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. முன்னாள் பணிப்பாளர் நாயகம் போலி சிறிசேன மற்றும் அவரோடு சேர்ந்து விளம்பரங்களில் தோன்றிய நடிகர்கைளையும் இலங்கை மன்றக் கல்லூரியிலேயே தங்க வைத்து அதற்கான கொடுப்பனவாக ரூ.2.5 லட்சத்துக்கான வெளச்சரைப் பெற்றுள்ளார்.
எனினும் புதிய அரசாங்கம் அந்தக் கொடுப்பனவையும் நிறுத்தியுள்ளதோடு மோசடியையும் கண்டறிந்துள்ளது. ரூபவாஹினியில் இடம்பெற்ற மேலும் பல மோசடிகள் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment