ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் (Tom Cruise) மிஷன் இம்பாசிபிள் எனும் புகழ்பெற்ற திரைப்பட வரிசையின் 5 வது பாகம் எதிர்வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிஷன் இம்பாசிபிள் 5 எனும் இப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, முன்னர் திட்டமிட்டதைவிட 5 மாதங்களுக்கு முன்னதாகவே இப்படத்தை வெளிடப்போவதாக இப்படத்தை விநியோகிக்கும் "பராமவுண்ட்" பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
(வீடியோ கீழே)
கிறிஸ்டோபர் மெக்ரோரி இயக்கும் இப்படத்தை டாம் குரூஸ், ஜே.ஜே.ஆப்ராஹாம், டேவிட் எலிஸன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். டாம் குரூஸுடன் ஜெரமி ரன்னர், சிமோன் பெக், ரெபேக்கா பேர்குசன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
மிஷன் இம்பாசிபிள் படத்தின் 4 வது பாகம் 2011 ஆம் ஆண்டில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ கீழே)

No comments:
Post a Comment