தயாநிதி மாறனின் பி.எஸ்.என்.எல். வழக்கில் முக்கிய சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ள 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ., தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, அவர் தொலைதொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் 323 பி.எஸ்.என்.எல்., அதி நவீன தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகத் தன் சகோதரரின் சன் டி.வி.க்கு, கொடுத்த விவகாரம் திடீர் திருப்பங்களுடன் சென்று கொண்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில், மாறனின் முன்னாள் தனிச் செயலாளர் கவுதமன், சன் தொலைகாட்சி ஊழியர்களான கண்ணன், ரவி மூவரும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்களை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்து சி.பி.ஐ., மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி மாலா முன்னிலையில் நடந்தது. நீதிமன்றத்தில், இந்த வழக்கு தொடர்புடைய 200 ஆவணங்களை சி.பி.ஐ., வழக்கறிஞர் சீனிவாசன் நீதிமன்றத்தில் கொடுத்தார்.
மேலும், தயாநிதிமாறனின் செயலாளர் கவுதமன், சன் தொலைக்காட்சி ஊழியர்கள் கண்ணன், ரவி ஆகிய மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சிபிஐ சார்பாக வழக்கறிஞர் சீனிவாசன் கேட்டுக் கொண்டார்.
இதற்கு நீதிபதி மாலா, கவுதமன் உட்பட மூன்று பேரையும் காவலில் விசாரிக்க அனுமதிகோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள சிபிஐ யின் மனுவில், முறையான கராணங்கள் இல்லை என்று குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment