தை பூசத்தை முன்னிட்டு இன்று முருகனின் அறுபடை வீடுகளான பழனி மற்றும் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை வந்துள்ளனர். மேலும், நேர்த்திக் கடனாக காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்றவற்றையும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்ததால், தண்டாயுதபாணியான முருகனை தரிசிக்க 5 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கின்றது.
அதேபோல, திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் பெருந்திரளான பக்தர்கள் திரண்டு வந்தனர். மேலும், இன்று தைபூசமானதால் அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டது.

No comments:
Post a Comment