துருக்கிக்கு சுற்றுலா சென்றிருந்த தமிழர் உட்பட 9 இந்தியர்கள், அங்கிருந்து சிரியாவுக்குள் நுழைய முற்பட்டத்தால் அவர்களை துருக்கி போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த 46 வயதான முகமது அப்துல் அஹத், அவரது மனைவி மற்றும் 5 பிள்ளைகள், அதே போல் தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ஜாவித் பாஷா மற்றும் கர்நாடக மாநிலம் ஹாசன் நகரைச் சேர்ந்த 24 வயதான இப்ராஹிம் நவ்பால் ஆகிய 9 பேரும், துருக்கியின் இஸ்தான் புல் நகரிற்குச் சுற்றுலா விசா மூலம் சென்றுள்ளனர்.
இஸ்தான் புல் நகரிலிருந்து, சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடாத இடங்களுக்குச் சென்றுள்ளனர் இந்த 9 பேரும். அதாவது,இஸ்தான் புல் நகரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிரியாவிற்குச் செல்ல முற்பட்டுள்ளனர்.
துருக்கியிலிருந்து தீவிரவாதிகள் இருக்கும் பகுதிக்கு ஊடுருவ முயன்ற இவர்கள் 9 பேரையும் துருக்கி காவலகள் கைது செய்துள்ளனர். இவர்களிடம் விசாரணை மேற்கொண்ட துருக்கி படையினர், 9 பேரையும், இந்தியாவிற்கு நாடுகடத்தி, பேங்களூரு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
துருக்கியிலிருந்து பெங்களூரு வந்த சென்னை வாசி முகமது அப்துல் அஹத் மற்றும் அவரது குடும்பம் உட்பட 9 பேரையும், பெங்களூரு போலீசார் மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இறுதியில், அவர்கள் மீது சந்தேகம் ஏதும் இல்லை என்ற நிலையில், கண்காணிப்பின் பேரில் விடுவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பெங்களூரு குற்றப்பிரிவு துணை ஆணையர் அபிஷேக் கோயல் தெரிவித்ததாவது,
”சென்னையை சேர்ந்த மகமது அப்துல் அஹத் (46), அவரது மனைவி, 5 பிள்ளைகள் தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த ஜாவித் பாஷா (24), கர்நாடக மாநிலம் ஹாசன் நகரை சேர்ந்த இப்ராஹிம் நவ்பால் (24) ஆகியோர், கடந்த மாதம் 24ம் திகதி இஸ்தான்புல் சென்றுள்ளனர்.
அங்கு எல்லை தாண்டிச் செல்ல முயன்றதால் கடந்த ஜனவரி 30ம் தேதி பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும், இவர்கள் சிரியாவுக்குள் செல்ல முயன்ற காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து வந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதற்கான ஆதாரம் இல்லாததால் விடுவித்துள்ளோம்.”

No comments:
Post a Comment