தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சார்மி. தமிழில் ‘காதல் அழிவதில்லை’, ‘ஆஹா எத்தனை அழகு’, 'லாடம்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் நட்சத்திர கிரிக்கெட் குழுவினர் ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்து இருந்த விருந்து நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். அப்போது அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று நடந்தது.
அதாவது சிசிஎல்5 நட்சத்திர கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதி போட்டி ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சென்னை அணிக்கும் ஐதராபாத் அணிக்கும் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.போட்டிக்கு பிறகு நடைபெற்ற விருந்தில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர்.
அதில் கலந்து கொண்ட நடிகை சார்மியிடம் 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அணுகி ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். சார்மியும் சம்மதித்து போஸ் கொடுத்துள்ளார். அவர் திடீரென சார்மி இடுப்பை பிடித்து கிள்ளி சில்மிஷத்தில் ஈடுப்பட்டார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அந்த வாலிபரை பிடித்து அடித்து உதைத்தனர்.
இதுகுறித்து சார்மி கூறும்போது, அந்த நபர் என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். நானும் சரி என்றேன். என் அருகில் நெருக்கமாக நின்ற அவர் திடீரென என் இடுப்பை பிடித்து சில்மிஷத்தில் ஈடுப்பட முயன்றார். நான் தள்ளி விட்டேன். அப்போது அருகில் நின்ற என் பாதுகாவலர்கள் அந்த வாலிபரை பிடித்து அடித்தார்கள்.
அப்போதும் அந்த நபர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார். அவர் சைக்கோவாக இருக்கலாமோ என்று நினைத்தேன். அந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதை நான் எதிர்பார்க்கவில்லை. இனி என் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவேன். அறிமுகம் இல்லாதவர்களை பக்கத்தில் நெருக்க விடமாட்டேன்’’ என்றார்.

No comments:
Post a Comment