Tuesday, 3 February 2015

வேர்ல்ட்ஸ் டாலஸ்ட் பில்டிங்ல தீயா….!! நல்லா கிளப்புறாய்ங்கையா பீதிய…!!


இன்றுவரை உலகின் உயரமான கட்டிடம், துபாயின் புர்ஜ் கலீஃபா. 829 மீட்டர் உயரமான இந்த கட்டிடத்தில் தீ பரவுவதாக நேற்று அதிகாலை டுவிட்டரில் பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன.
இது வெறும் வதந்தி என்று சிலர் நினைக்க, கட்டிடத்தைச் சுற்றி புகை சூழ்ந்திருக்குமாறு போட்டோ எடுத்து ”ரசீதோடு” அனுப்பி இருக்கின்றனர் டுவிட்டர் வாசிகள்.
இதனால், பதறி அடித்துக் கொண்ட கட்டிடத்தைச் சுற்றி இருந்தவர்கள் கட்டிடத்தை அன்னார்ந்து பார்க்க, கட்டிடத்தின்மேல் முனையில், புகை மண்டலமாகவே தெரிந்துள்ளது.
உலகிலேயே உயரமான கட்டிடம் என்பதால், சர்வதேச ஊடகங்கள் சில, போட்டி போட்டுக் கொண்டு காட்டுத் தீயாய் இந்தச் செய்தியை உலகிற்குப் பரப்பின. உடனே துபாய் போலீசுக்கும், மீட்புப் படைக்கும் போன் பறந்தது.
சில நொடிகளில் போலீசும், மீட்புப் படையும், புர்ஜ் கலீஃபா பாதுகாப்பு அமைப்பிற்கு போன் போட்டு, கட்டிடத்தில் தீப்பிடித்துள்ளதாக பொதுமக்களிடம் இருந்து தகவல் வந்தது என்று கேட்டுள்ளனர்.

உள்ளே இருந்தவர்களோ, அப்படி ஏதும் இல்லையே, இங்கே எல்லாம் நார்மலா தானே இருக்கு என்று கூலாகச் சொல்ல, வெளியில் வந்து பாருங்க பில்டிங்கச் சுற்றி புகையா இருக்கு என்று போலீஸ் கூறியுள்ளது.
இதன் பிறகு தான், அது புகையே இல்லை, வெறும் பனியும் மேகமும் என்று எல்லோருக்கும் தெளிவு படுத்தியுள்ளது, பில்டிங்க் நிர்வாகம். கடைசியில் உண்மையான புகை, செய்தி வெளியிட்ட ஊடகங்களுக்குத் தான். இப்போ புகை எல்லாம் பொய்யுனு, செய்தியை திருத்தி வெளியிட்டு வருகின்றன இந்த ஊடகங்கள்…

No comments:

Post a Comment