Tuesday, 3 February 2015

சினிமாவில் வருவதற்க்கு முன் இப்படிலாம் விரட்டப்பட்டேன்…!


பாலிவூட் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சன் சினிமாவில் பிரபலமாகுவதற்கு முன்னர் வானொலி அறிவிப்பாளர் பணிக்காக குரல் தேர்வு சோதனைக்குச்சென்றபோது தான் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தனுஷ், அக் ஷரா ஹாசன் உடன் நடித்த ஷமிதாப் திரைப்படம் தொடர்பாக லண்டனில் நடைபெற்ற ஊக்குவிப்பு நிகழ்வொன்றில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
(வீடியோ கீழே)
"அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளர் மற்றும் வர்ணனையாளராகுவதற்காக ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் நான் குரல் தேர்வில் பங்குபற்றினேன். ஆனால், நான் அங்கு நிராகரிக்கப்பட்டேன். சிலவேளை எனது குரல் பொருத்தமற்றதாக இருந்திருக்கலாம்.
அக்காலத்தில் மிகச் சிறந்த வர்ணனையாளர்கள் இருந்தனர்" என அமிதாப் பச்சன் கூறினார். திரைப்படங்களில் மேலும் பாடுவீர்களா என அமிதாப்பிடம் கேட்டபோது, தனது பாணியில் வேடிக்கையாக அமிதாப் பதிலளித்தார்.
"எனது குரல் மிக கொடூரமானது. நான் ஒரு பாடகன் அல்லர். ஆனால், இப்போது மிகச் சிறந்த கருவிகள் உள்ளன. இதனால் ஒருவரின் குரல் எந்தளவு மோசமாக இருந்தாலும் அதை ஆட்டோ டியூன் முறையில் (காலஞ்சென்ற அமெரிக்க பாடகர்) பிராங் சினாத்ராவின் குரல் போன்று மாற்றிவிடலாம்" என அமிதாப் பச்சன்கூறினார்.
(வீடியோ கீழே)

No comments:

Post a Comment