Monday, 23 February 2015

பா.ஜ.க.: Missed Call கொடுத்து ஆள் சேர்பவர்கள்!! அ.தி.மு.க.: வெட்கம் இல்லாதவர்கள்!!


முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அ.தி.மு.க., ஆதரவாளர்கள் மக்கள் முதல்வர் என்று கூறி வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
இந்நிலையில், நடிகையும், காங்கிஸ் கட்சி தாரருமான குஷ்பு, ஜெயலலிதாவை மக்கள் முதல்வர் என்று அழைப்பவர்கள் வெட்கம் கெட்டவர்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில், சென்னை அரும்பாக்கத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து, பொதுக் கூட்டம் ஒன்று நடந்தது. இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய குஷ்பு, “வரும் 2016ம் ஆண்டு, தமிழ்நாட்டில், நிச்சயமாக காங்கிரஸ் வெற்றி பெறும்."
” ஜெயலலிதாவை மக்கள் முதல்வர் என்று அழைக்கிறார்கள். அப்படி அழைப்பவர்கள் எல்லோருக்கும் கொஞ்சம் கூட வெட்கம் என்பது கிடையாது."
"ஏனெனில், மக்கள் முதல்வராக இருந்தவர் காமராஜர் ஒருவர் தான்." என்று கூறியுள்ளார்.
இதே கூட்டத்தில், பா.ஜ.க.,வையும் விட்டு வைக்க வில்லை குஷ்பு.
“பாஜகவினர் மிஸ்டு கால் மூலம் தினமும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஸ்ரீரங்கத்தில் வெறும் ஐந்தாயிரம் ஓட்டுகள் தான் வாங்கினார்கள்” என்று குறிப்பிட்டு பா.ஜ.க.,வையும் விளாசி யுள்ளார் குஷ்பு.

No comments:

Post a Comment