நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் பிரண்டன் மெக்குலம் மிக விரைவான அரைச்சதத்தை அடித்து உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலகசாதனையை ஏற்படுத்தினார்.
இங்கிலாந்து அணிக்கெதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கட் என்ற மிகப்பெரிய வித்தியாசத்திலும் 226 பந்துகளை மிகுதியாக வைத்து இந்த சாதனையை ஏற்படுத்தினார் இந்தப் போட்டியில் இவர் 25 பந்துகளை எதிர் கொண்டு 77 ரன்களை அடித்து ஆடினார்.
இதற்கு முன்னர் பிரண்டன் மெக்குலம் தனது அரைச்சதத்தை 18 பந்துகளில் இந்த அரைச்சதத்தினை ஏற்படுத்தினார் இதன் மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் குறைவான பந்தில் அரைச்சதம் அடித்த வீரர் சாதனையை படைத்துள்ளார்.
இதேவேளை இவர் 2007ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் போது கனடா அணிக்கெதிராக 24 பந்துகளை எதிர்கொண்டு அரைச்சதத்தை ஏற்படுத்தினார். இதுதான் இதற்கு முன் உலகக்கோப்பை கிரிக்கெட் சாதனையாக இருந்தது ஆனால் இந்த முறை 18வது பந்தை சிக்ஸருக்கு அடித்து அரைச்சதம் அடித்த மெக்குலம் தனது சாதனையை இவரே முறியடித்துள்ளார் இதனைத் தொடர்ந்து 4சிக்ஸர்களை வரிசையாக அடித்து ரசிகர்களை உற்சாகபடுத்தினார்
No comments:
Post a Comment