அண்மையில் ஒரு பிரபல கட்சியில் இணைந்த பவர் ஸ்டார் தற்போது ஒரு உறுதி மொழியை எடுத்திருக்கிறாராம். அதாவது இனிமேல் எந்த மேடையிலும் லூஸ் டாக் விட மாட்டேன் என்பதுதான்.
சமீபகாலமாக தான் கலந்து கொள்ளும் மேடைகளிலும், நிகழ்ச்சிகளிலும், ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற வேண்டும் என்பதற்காக ஏதாவது காமெடியாக பேசி தேவையில்லாத வம்பிலும் மாட்டிக்கொண்டு வருகிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். குறிப்பாக, சமீபத்தில் நடந்த ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியவர், நானே பெரிய செக் மோசடி பேர்வழி.
ஆனால் சினிமாவில் எனக்கே செக் மோசடி செய்கிறார்கள். இனிமேல் அந்த தப்பெல்லாம் செய்ய வேண்டாம் என்று நானே திருந்த நினைத்தாலும் என்னை திருந்த விட மாட்டார்கள் போலிருக்கு. நானெல்லாம் மோசடி பண்ண ஆரம்பிச்சேன் இவங்க தாங்க மாட்டார்கள் என்று பேசி விட்டார் அமர்ந்தார்.
அதோடு, தயாரிப்பாளர்களை கிண்டலாகவும் பேசினார். இதனால் கடுப்பான சில தயாரிப்பாளர்கள் பவர் ஸ்டாரை ஒரு பிடி பிடித்து விட்டனர். அதோடு பவர் ஸ்டார் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் அவருக்கு முக்கியத்துவம் தரக்கூடாது என்று முடிவெடுத்தனர். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த நம்ப பவர் இனிமேல் மேடைகளில் தேவையில்லாத விஷயங்களை பேசப்போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறாராம்.
நான் விளையாட்டாக எதையாவது பேசப்போக அது பரபரப்பாகி விடுகிறது. அதனால் யாராவது சினிமா நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் அமைதியாக போய்விட்டு திரும்பி விடுவேன். அவர்கள் பேச சொன்னால் கூட மைக்கிற்கு 10 அடி தூரத்தில் நின்று ஓடி வந்துவிடுவேன் என கூறி வருகிறார் பவர்.

No comments:
Post a Comment