செல்ஃபி எடுக்க யாருக்குதான் பிடிக்காது??
இனிமையான சம்பவங்களை நினைவு கூற செல்ஃபி எடுத்துக் கொள்கின்றனர்.
புதுசா டிரஸ் போட்டா… எடுடா ஒரு செல்ஃபி, போடுடா ஷேரை…
ரொம்ப நாள் கழித்து ஃப்ரண்ட்ஸை மீட் பண்றீங்களா?? ரொம்ப ஸ்பெஷலான இடத்துக்கு போயிருக்கீங்களா??
அட இதெல்லாம் விடுங்க… வீட்ல தனியா போரடிக்குதா… எதுக்கெடுத்தாலும் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என்று சமூகதளங்களில் பகிர்ந்து லைக்காக காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.
ஆனால் செல்ஃபி எடுப்பதில் இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால் பின்பக்க கேமராவுக்கு இருப்பது போல முன்பக்க கேமராவுக்கு ஃப்ளாஷ் லைட் கிடையாது.
தற்போது இதற்காகவே ஸ்பெஷலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது செல்ஃபி ஃப்ளாஷ். ஆமாம், இதனை உங்கள் ஸ்மார்ட் போனின் ஹெட்போன் இணைக்கும் இடத்தில் இணைத்துக் கொள்ளலாம்.
இனி எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment