Wednesday, 4 February 2015

மீண்டும் முதலில் இருந்தா..? தாங்குமா திரையுலகம்..!


சிம்புவின் காதல் பற்றியும், நயன்தராவின் காதல் பற்றியும் சொல்லத் தேவையில்லை. ஓராயிரம் முறை சொல்லிவிட்டாம். அதற்கு பிறகு இருவருக்குள்ளும் பல காதல்கள் வந்து அது ப்ரேக் அப் ஆகிவிட்டது.
தற்போது மீண்டும் தங்களது பழைய காதலை இருவரும் புதுபித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அதை சிலர் நம்பவில்லை. இந்நிலையில் தான் சிம்பு பிறந்த நாள் பார்ட்டியில் ஒருசில விஷயங்கள் நடந்துள்ளன. சிம்புவுடன் இது நம்ப ஆளு படத்தில் நடிக்கும் போது பல கண்டிஷன்களை போட்ட நயன்தாரா சிம்புவின் பிறந்த நாள் பார்ட்டியில் உரசி உரசி பேசினாராம்.
சமீபத்தில் தனது 31-வது பிறந்த நாளை தனது திரையுலக நண்பர்களுடன் வெகுவாக கொண்டாடினார் சிம்பு. அதோடு பிறந்த நாள் பார்ட்டியும் வைத்தார். இந்த பார்ட்டியில் நண்பேன்டா தனுஷ், முன்னாள் காதலி நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத், பாடகர் விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஹேப்பி பர்த்டே எஸ்டிஆர் 31 என்று எழுதப்பட்ட கேக்கை சிம்பு வெட்டினார். பிறகு எல்லோரும் பார்ட்டிக்கு தயாரானார்கள். அப்போது போட்டோவுக்கு போஸ் கொடுத்த சிம்புவும், நயன்தாராவும் நெருக்கமாக காணப்பட்டதுடன் உரசி உரசி பேசிக்கொண்டனராம். அதோடு இருவரும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து வந்திருந்தனராம். இதனால் மீண்டும் இருவருக்கும் காதல் தீப்பற்றி இருக்குமோ என்று ஆச்சரியப்படுகிறது கோலிவுட்..
மீண்டும் முதல இருந்தா..?

No comments:

Post a Comment