லுங்கி டான்ஸ் என்றாலே தெரிந்துவிடும் அது சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக நடிகர் ஷாருக்கான் அர்ப்பணித்த பாடல் என்று.
சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலுக்கு நடிகர் ஷாருக்கானும், தீபிகா படுகோனேவும் நடனமாடி இருந்தார்கள். இந்த பாடல் உலகெங்கும் பிரபலமானது.
இந்நிலையில் துபாயில் சிறுமி ஒருவர் கேட்டுக் கொண்டதுக்காக ஷாருக்கானும், தீபிகா படுகோனேவும் பப்ளிக்காக லுங்கி டான்ஸ் ஆடியுள்ளனர். சமீபத்தில் ஷாருக்கானும், தீபிகா படுகோனேவும் துபாயில் நடந்த ஹேப்பி நியூ இயர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.
துபாயில் உள்ள மால் ஒன்றில் படப்பிடிப்பு நடந்தபோது சிறுமி ஒருவர் ஷாருக்கானை அழைத்து லுங்கி டான்ஸ் ஆடுமாறு கூறினார். இதை பார்த்த தீபிகா, ஷாருக்கானை அழைத்து வாங்க ஆடலாம் என்றார். பிறகு இருவரும் லுங்கி டான்ஸ் ஆட இதை பார்த்த சிறுமி மகிழ்ச்சியில் துள்ளி குத்திதார். இந்த வீடியோ கடந்த 31ஆம் தேதி யு-டியூப்பில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ கீழே...

No comments:
Post a Comment