Monday, 23 February 2015

HTC ஒன் M9 எப்படி இருக்கும் தெரியுமா??


ஸ்மார்ட்ஃபோன் உலகில் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி தனி சாம்ராஜ்யம் நடத்தி வரும் HTC நிறுவனம் தனது அடுத்த வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.
எனினும் இதன் அடுத்த வெளியீடான HTC ஒன் M9 குறித்த தகவல்களை இந்நிறுவனம் பாதுகாத்து வந்தது. ஆனால் சமீபத்தில் இதன் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
பார்ப்பதற்கு இதற்கு முந்திய வெளியீடான M8 போலவே இருக்கின்றது. எனினும் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவாம்.
இதனை வெளியிட்டுள்ள அந்த இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ள வசதிகளின் படி, இந்த ஸ்மார்ட்ஃபோன் 2.0GHz ஆக்டோ-கோர் ப்ரோசசருடன் ஸ்னாப் டிராகன் 810 சிப்செட் உடன் வருகின்றதாம்.
மேலும், இது 3GB RAM மற்றும் 32GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் இதில் SD கார்டு பயன்படுத்த முடியுமாம்.
5 இன்ச் ஸ்கிரீனுடன் வரும் இதில் 20.7 மெகா பிக்சல் கேமரா இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment