Monday, 23 February 2015

ரெண்டுமே அஜித் பிறந்த நாளுக்கா..? அப்போ ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..


வரும் மே 1 உழைப்பாளர் தினம் என்றாலும்கூட அன்றுதான் நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த விஷயம் தான்.
அன்றைய தினம் அவருடைய ரசிகர்கள் பலரும் சமூக சேவைகளை ஈடுபட்டு அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடுவார்கள். இந்நிலையில் அன்றைய தினம் மேலும் ஒரு கொண்டாட்டமாக முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும் என தெரிகிறது.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிவரும் படம் ‘ரஜினி முருகன்’.இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படம், மே 1ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் கூறி வருகின்றனர்.
அதேபோல் அஞ்சான் படத்திற்கு பிறகு சூர்யா நடித்து வரும் ‘மாஸ்’ படமும் அன்றே வெளியாகும் எனத் தெரிகிறது. வெங்கட்பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சூர்யாவுடன் இணைந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் தயாரித்து உள்ளது. இப்படத்தையும் அன்றைய தினமே வெளியிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
‘ஆதவன்’ படத்திற்கு பிறகு சூர்யாவோடு நயன்தாரா மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்திற்கு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment