Monday, 23 February 2015

அந்த படத்தை பற்றி பேசவேண்டும் என்றால் பச்சையாக தான் பேச வேண்டும்..!


'இரண்டாம் உலகம்' படத்திற்கு பிறகு செல்வராகவன் எங்கே இருக்கிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதே புரியா புதிராக இருக்கிறது.
அந்த படத்திற்குப் பிறகு கடந்த ஒன்றரை வருடங்களாக வேறு எந்தப் படத்தையும் இயக்காமல் இருக்கிறார் செல்வராகவன். அதன் பின் எந்த ஒரு பத்திரிகை பேட்டியும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் சமீபத்தில் சிம்பு நடிக்கும் படம் ஒன்றை செல்வராகவன் இயக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியானது.
இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'இரண்டாம் உலகம்' படத்தின் தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், “இரண்டாம் உலகம்' படத்தைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் பச்சையாகப் பேச வேண்டும். அதை அச்சில் கூட ஏற்ற முடியாது, அந்த அளவிற்கு சுமார் 325 பேர் என் முதுகில் குத்தியிருக்கிறார்கள்,” என்று சொல்லியிருக்கிறார்.
ஒரு வேலையை செய்ய சம்மதித்தால் அதில் நேர்மை இருக்க வேண்டும், எனக்கு என் மீது நம்பிக்கை இருக்கிறது, சேர்ந்து செய்யலாம் என்று சொன்னவர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்,”என்றும் கூறியிருக்கிறார்.
அப்படியென்றால் செல்வராகவன் முதுகில் குத்திய அந்த 325 பேரில் யார் யார் இருப்பார்கள் என்பது தற்போது ஒரு புதிய சர்ச்சையாக எழும் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் சில நாட்களுக்கு கோலிவுட்டில் இது தொடர்பான பல செய்திகளை கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment