பால் என்றால் சிறுவயது பிள்ளைகள் தெறித்து ஓடுவார்கள். சில பெரிய வயதுக்காரர்களுக்கே பால் பிடிக்காது. கேட்டால் எனக்கு பால் வாடையே பிடிக்காது என்பார்கள்.
ஏன் இத்தனைக்கும் பாலால் செய்து இனிப்பைக் கூட எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஆனால் பால் குடிப்பதற்கு மட்டும் இல்லை. இதன் மூலம் உங்கள் அழகை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம் என்று தெரியுமா??
கீழே தொடருங்கள்…
பச்சைப் பாலை பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி பத்து அல்லது பதினந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவி வர சருமம் மென்மையாக இருக்கும். மேலும் முகப் பருவையும் இப்படி செய்வதின் மூலம் தடுக்கலாம்.
குதிகால் வெடிப்பை சரி செய்யவும் பால் பயன்படுகிறது. 4 கப் வெதுவெதுபான தண்ணீரில் பாதி அளவு பால் சேர்த்து காலை சிறிது நேரம் ஊறவைக்கவும். பின்னர், பாதத்தினை நன்கு தேய்த்துக் கழுவிவர குதிகால் வெடிப்புகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
வெதுவெதுப்பான நீரில் பால் கலந்து குளித்து வர உங்கள் சருமம் மிருதுவாகவும் பொலிவுடனும் இருக்கும்.
No comments:
Post a Comment