Monday, 23 February 2015

”அம்மா முதல்வராக வேண்டும்” சிலுவையில் அறைந்து கொண்ட கராத்தே மாஸ்டர்!!


சொத்து குவிப்பு வழக்கால் பதவியிழந்த, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயல்லலிதா மீண்டும் தமிழ் நாட்டின் முதல்வராக வேண்டும் என்பதற்காக, ஷிகான் ஹுசைனி என்ற கராதே மாஸ்டர் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டார்.
ஷிகான் ஹுசைனி ஒரு பிரபலமான கராதே மாஸ்டர் மற்றும் ஓவியர். சர்ச்சையைக் கிளப்பும், ஓவியங்களையும் சிற்பங்களையும் உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்துபவர்.
அது மட்டுமல்லாது சில படங்களிலும் தோன்றியுள்ளார். இவர் பயங்கர ஜெயலலிதா ஃப்னும் கூட. இதை நிரூபிக்கும் விதமாக, ரத்ததாலேயே ஜெயலலிதாவின் படங்கள் சிலவற்றை வரைந்து ஃப்ரேம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
கடந்த 2013ம் ஆண்டு 11 லிட்டர் உரைந்த ரத்தத்தால் ஜெயலலிதாவின் சிற்பத்தை அமைத்து அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கினார்.
இதை அடுத்து நேற்று, ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்து, பெரிய மர சிலுவையில் தனது கைகள் மற்றும் கால்களில் சுமார் 6 இன்ச் ஆணிகளை அடித்துக் கொண்டுள்ளார்.
அவர் நடத்தி வரும் வில் வித்தை மையத்தில், தன் உதவியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் சிலரது முன்னிலையில், இந்த வேண்டுதலை செய்துள்ளார் ஷிகான் ஹுசைனி. சுமார் 6 நிமிடங்கள் வரை கை, கால்களில், ஆணிகளுடன் தொங்கிய ஷிகான் வேண்டுதல் முடிந்த உடனேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முஸ்லிமான இவர் தனது பள்ளிப் படிப்பை கிறிஸ்துவ பள்ளியில் பயின்றார். இதனால், தனக்கு சிலுவை மீது அதீத நம்பிக்கை உண்டு என்று அவர் கூறியுள்ளார். இந்த சிலுவை வேண்டுதல் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”இந்தியர் ஒருவரும் இப்படி தங்களைத் தாங்களே சிலுவையில் அறைந்து கொண்டு இருக்க மாட்டார்கள்.”
”இந்த உலகில் யாரும் இப்படி தங்களைத் தாங்களே சிலுவையில் அறைந்து கொண்டது கிடையாது.”
”எனக்கு ஜெயலலிதாவை ரொம்பப் பிடிக்கும்.”
”ஏனெனில், எங்களுக்கு தேவையான போது, அவர் உதவுவார்.”
”அவர், நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காகவும், மீண்டும் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்பதற்காகவும் தான் இந்த வேண்டுதலை நான் செய்தேன்.”
”சிலுவையில் என்னை நான் அறைந்து கொண்ட போது சிரித்தேன்.”
“பலர் இது, அ.தி.மு.க.,வினரின் வேலை தான் என்று கூறினர். ஆனால், இந்நிகழ்வின் போது அ.தி.மு.க., மந்திரிகள் யாரும் இங்கு இல்லை.” என்று கூறினார்.
மேலும், தன் குடும்பத்தினர் யாரும் இந்த சிலுவை அறைதலுக்கு சம்மதிக்க வில்லை என்றும், தன் மனைவி எதிர்த்ததுடன், தனது தங்கை இது குறித்து போலீஸில் புகார் செய்வேன் என்று மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment