Tuesday, 3 February 2015

லெஸ்பியன் Helpline-க்கு போன் செய்து வழியும் ஆண்கள்!! குமுறும் ஊழியர்கள்!!


ஓரினச்சேர்க்கை பெண்களுக்கு வழிகாட்ட வைக்கப்பட்டுள்ள உதவி மையத்திற்கு பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் போன் செய்கின்றனராம்.
ஜெள்ளு விடுவதற்காகவே போன் செய்து, அங்கு பேசும் பெண்களிடம் இக்கட்டான கேள்விகளைக் கேட்டு தொல்லை செய்கின்றனராம். சென்னையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண் ஓரினச்சேர்க்கை ஜோடி ஒன்று தற்கொலை செய்து கொண்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து, பெண் ஓரினச்சேர்க்கையாளர்களை நல்வழிப்படுத்தும் விதமாக, இந்திய கம்பூனிட்டி வெல்ஃபேர் ஆர்கனைசேஷன் என்ற தன்னார்வ அமைப்பு லெஸ்பியன் ஜெல்லைன் ஒன்றை அமைத்து நடத்தி வருகிறது.
இந்த ஹெல்ப்லைன் சேவை மையத்தில், தன்னார்வ தொண்டு எண்ணம் கொண்ட பெண்கள் சிலர் வேலை செய்து வருகின்றனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இந்த ஹெல்ப்லைன் இயங்கி வருகிறது.
ஓரினச்சேர்க்கை குறித்த சந்தேகங்கள், சமூகத்தில் இதன் தாக்கம், இது குறித்த விளக்கம் தேவைப்படும் பெண்கள் 044-65515742 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.
ஹெல்ப்லைன் சேவை
ஓரினச்சேர்க்கையாளர்கள் பலர், சமூகத்தில் ஒதுக்கப்படுவதாலும், இந்த உலகில் தங்களைப் போல் யாரும் இல்லை என்று நினைப்பதாலும், தற்கொலை போன்ற தவறான வழிகளில் சென்றுவிடுகின்றனர்.
இதைத் தவிற்கும் வகையில், இந்த ஹெல்ப்லைன் செயல்பட்டு வருகிறது. அதாவது தனிமையாக உணரும்ஓரினச்சேர்க்கை பெண்களிடம், உலகில் இவர்களைப் போல் எண்ணம் கொண்டவர்கள் இருப்பதை ஆதாரத்துடன் கூறி, அவர்களது மனதை தேற்றிப் பின் அவர்களை இயற்கையான வழிக்கு கொண்டு வருவது தான் இந்த ஹெல்ப்லைனின் வேலை.
கடந்த 2009ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஹெல்ப்லைனிற்குத், தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி, லண்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் பெண்களும் சந்தேகம் கேட்டு அழைக்கின்றனராம்.
இந்த ஹெல்ப்லைன் பலரது மன அழுத்தத்தை மாற்றியுள்ளது என்றார் ஊழியர்கள்.
பெண்கள் லைனில் ஆண்கள்
பிரத்தியேகமாக பெண்களுக்காகவே செயல்பட்டு வரும் இந்த ஹெல்ப்லைனில் ஆண்கள் மிகத் தந்திரமாக நுழைந்து, ஏடா கோடமாகக் கேட்டு இங்கு வேலை செய்யும் பெண்களிடம் ஆபாசமான உரையாடலை மேற்கொள்ள முயன்று வருகின்றனராம்.
இந்த ஹெல்ப்லைனுக்கு, தினமும் சராசரியாக 25 அழைப்புகள் வருகிறதாம். இதில் 80 சதவீம் ஆண்களின் அழைப்பாகத்தான் உள்ளதாம். இங்கு போன் செய்யும் ஆண்கள், முதலில் தம் சகோதரி, மனைவி அல்லது தெரிந்த வேறு எந்த ஒரு பெண்ணுக்கு, ஓரினச்சேர்க்கையில் நாட்டம் இருப்பதாகக் கூறி, அதை தீர்க்க வழி சொல்லும்படியும் ஆரம்பிக்கின்றனராம்.
பின்னர் மெதுவாக, ஹாட் டாபிக்கிற்கு மாற்றிச் செல்கின்றனராம். அதாவது, மருத்துவ சந்தேகம் கேட்பது போல, கேட்டுப் பின்னர், ஏன் பெண்களுக்கு பெண்கள் மீது ஆசை வருகிறது என்று ஆரம்பித்து அப்படி என்ன பண்ணுவாங்க லெஸ்பியன்ஸ் என்று ஆபாசத்திற்கு தாவி விடுகின்றனராம் ஜொள்ளு ஆண்கள். இதனால் அங்கு பணிபுரியும் பெண்கள் பெரும் சங்கடத்திற்கு ஆளாகின்றனர்.
இச்சம்பவம் குறித்து பிரபல உளவியல் நிபுணர் ஒருவர் கூறுகையில்,
"ஆண்கள்ளு சிலருக்கு தொலைபேசி வழியாக ஒரு பெண்ணிடம் உடலுறவு பற்றி பேசுவதில் கிளுகிளுப்பு கிடைக்கிறது.”
”அதனடிப்படையில் தான், இந்த ஹெல்ப்லைனிலும் ஆண்கள் நடந்து கொள்வதாகத் தெரிகிறது.”
”பொறுப்பற்ற மனிதர்கள் சிலர் தான் இப்படி நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டத்தை கெடுக்கும் வகையில் நடப்பார்கள்" என்றார்.

No comments:

Post a Comment