எகிப்திய நீதிமன்றமொன்று 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எகிப்திய கெய்ரோ நகருக்கு அண்மையில் 11 போலிஸ் அதிகாரிகளை படுகொலை செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான 183 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைகளை திங்கட்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த ஜுலை மாதம் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி வெளியேற்றப்பட்டமை தொடர்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நசுக்க போலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளையடுத்து இந்தத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
கெர்டாஸா பிராந்தியத்தில் இடம்பெற்ற மேற்படி தாக்குதலில் குறைந்தது 11 போலிஸ் அதிகாரிகள் பலியானார்கள். கடந்த காலங்களில் நூற்றுக்கணக்கான முர்ஸின் ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதும் எவருக்கும் இதுவரை அந்த தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
முர்ஸியின் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்தை நசுக்க இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் போது நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

No comments:
Post a Comment