Tuesday, 3 February 2015

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: ஒரு ஓட்டுக்கு ரூ. 5000..??


ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தேதி நெருங்க, நெருங்க பரபரப்பும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அண்மையில், தான் இந்த இடைத்தேர்தல் 100 சதவீதம் நேர்மையாக நடக்கும் என்று தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல்களில் ஊழலைக் குறைக்க, மத்திய உள்துரையிடம் மனு கொடுத்து, தேர்தல் சட்டங்கள் சிலவற்றை திருத்தும் பணியிலும் ஈடுபட்டது. இந்த புதிய சட்டத் திருத்ததின் படி, ஓட்டுக்கு பணம் கொடுப்போருக்கு 2 வருடம் சிறை, புகார் இல்லாமல் பணத்தை கைப்பற்றுவது, சோதனையிடுவது, சந்தேக நபரை விசாரிப்பது என தேர்தல் அதிகாரிகளுக்கு புதிய அதிகாரங்களும் வழங்கப்பட இருக்கிறதாம்.
இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் தலைவர் இ.வி.கே.எஸ்., இளங்கோவன், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க., சார்பில் ஓட்டு ஒன்றுக்கு ரூ.5000 லஞ்சம் கொடுக்கப்படுகிறது என்றும், இந்த முறைகேட்டை தடுக்க தேர்தால் ஆணையம் நாவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தல் ஆணையம் மீதே மக்களுக்கு நம்பிக்கை போய்விடும் என்றும் பேட்டி அளித்துள்ளார்.
இந்த பரபரப்புப் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களாகவே தொடர்ந்து விவகாரமான கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பி வருகிறார் இளங்கோவன்.

No comments:

Post a Comment