Tuesday, 3 February 2015

3வயது சிறுவனின் அதிர்ச்சியூட்டும் சம்பவம்…!


மூன்று வயது சிறுவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவனது நிறை மாத கர்ப்பிணியான தாயாரும் தந்தையும் காயமடைந்த விபரீத சம்பவம் அமெரிக்காவில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
நியூமெக்ஸிக்கோவில் அல்பு குயர்கியு நகரிலுள்ள விடுதியில் தனது தந்தையான ஜஸ்டின் ரேனால்ட், தாயாரான மொனிக் வில் லெஸ்கஸ் மற்றும் இரண்டு வயது சகோதரியுடன் மேற்படி சிறுவன் தங்கியிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது தாயாரின் கைப்பையிலிருந்த ஐபாட் கருவியை எடுக்க சென்ற சிறுவன், அதிலிருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிய போதே இந்த விபரீதம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூடு இடம் பெற்ற விடுதி மெனோல் அன்ட் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் அமைந் துள்ளது.
சிறுவன் துப்பாக்கியுடன் விளையாடிய போது பாய்ந்த ஒரு துப்பாக்கி குண்டு அவனது தந்தையான ஜஸ்டினின் வலது பிருஷ்டி பாகத்தில் பாய்ந்த அதேசமயம், மற்றொரு துப்பாக்கி குண்டு அவனது தாயான 8 மாத கர்ப்பிணியான மொனிக்கின் கையில் பாய்ந்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டையடுத்து மொனிக்கும் ஜஸ்டினும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் போலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment