Tuesday, 3 February 2015

தாவூத் இப்ராஹிம்மின் சகோதரர் மும்பையில் அதிரடி கைது!!


பாகிஸ்தானில் பதுங்கியுள்ள நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்மின் சகோதரர் இக்பால் கஸ்கர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டு இந்திய போலீசாரால் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.
தாவூத் இப்ராஹிம்மை இந்தியாவிடம் ஒப்படைக்கும் படி பாகிஸ்தானிடம், இந்தியாவும் கேட்டு கேட்டு சலித்து விட்டது. இன்றுவரை இவர் இல்லவே இல்லை என்று பாகிஸ்தான் சாதித்து வருகிறது.
மாறாக, உளவுத் துறையின் தகவல்களின் அடிப்படையில், கடைசியாக தாவூத் இப்ராஹிம் கராச்சியில் பதுங்கி இருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், தாவூத்தின் சகோதரரும், மும்பையில் கட்டப்பஞ்சாயத்தும் ரவுடிசமும் செய்து வரும் இக்பால் கஸ்கரை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இவருடன், அவரது இரண்டு முக்கிய ஆட்கள் இருவரும்கைது செய்யப்பட்டுள்ளனராம். மும்பையில், சலீம் சேக் என்ற ரியல் எஸ்டேட் தொழிலாளரை இக்பால் மிரட்டியதாக நேற்று இரவு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், இக்பாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர் போலீசார்.

No comments:

Post a Comment