இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம் தான் ’ஐ’. அண்மையில் ரிலீஸான இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. இருந்தாலும் படம் வெளிவந்த 20 நாட்களிலேயே தமிழ்த் திரைப்படங்களின் வசூலில் ஒரு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. இதற்கு காரணம்விக்ரம் விக்ரம் விக்ரம் மட்டுமே..
அவருடைய நடிப்பை பார்த்து மெர்சலான ரசிகர்கள் அவருக்காகவே படத்தை பார்த்து வருகின்றனர். படத்தைப் பற்றி ஆரம்பத்தில் நெகட்டிவ்வான சில விமர்சனங்கள் வெளிவந்தாலும் விக்ரமின் அபாரமான நடிப்பால் தியேட்டர்களில் கூட்டம் கூட்டமாக குவிந்தனர் ரசிகர்கள்.
இதனால் படம் வெளியாகி ஒரு சில நாட்களிலேயே 100 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. தற்போது ஐ படம் உலகம் முழுவதும் 205 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளியுள்ளதாகவும், பங்குத் தொகையாக மட்டும் 105 கோடி ரூபாய் வரை கிடைத்திருக்கும் என்றும் டோலிவுட் வியாபார வட்டடாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் திரையுலகின் முக்கியமான ஏரியாவாகக் கருதப்படுவது மதுரை ஏரியாதான். அந்த ஏரியாவை வைத்துத்தான் ஒரு படத்தின் வெற்றியையும் கணிப்பது வழக்கம். அந்த விதத்தில் 'எந்திரன்' படத்திற்காகக் கிடைத்த பங்குத் தொகையை 'ஐ' படம், இப்போதே தாண்டி விட்டதாம்.
இது போன்று மற்ற ஏரியாக்களிலும் 'ஐ' படத்தின் வசூல் 'எந்திரன்' படத்தின் வசூலை மிஞ்சி வருவதாகத் தகவல்கள் கிடைத்து வருகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 75 கோடி ரூபாய் வரை வசூலும், பங்குத் தொகையாக 55 கோடி ரூபாய் வரையிலும் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இன்னும் பல திரையரங்குகளில் 'ஐ' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் வரும் நாட்களிலும் இந்த வசூல் தொடரும் என்பதால் தமிழ்த் திரையுலகில் அதிக வசூலைக் குவிக்கும் படமாக 'ஐ' படம் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைக்கும் என்கிறார்கள்.

No comments:
Post a Comment