கியூப முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ (fidel castro) தோன்றும் புகைப்படங்களை அந்நாட்டு அரசாங்க ஊடகம் திங்கட்கிழமை இரவு வெளியிட்டுள்ளது. மேற்படி ஊடகம் பிடல் காஸ்ட்ரோவின் புகைப்படங்களை வெளியிடுவது ஆறு மாதங்களுக்குப் பின்னர் இதுவே முதல் தடவையாகும்.
பிடல் காஸ்ட்ரோ (88வயது) தனது வீட்டில் தனது மனைவி டலியா உடன் மாணவர்கள் ஒன்றிய தலைவரை சந்தித்த போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன. மேற்படி சந்திப்பானது கடந்த ஜனவரி 23 ஆம் தேதி இடம்பெற்றுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி 8 ஆம் தேதி தனது வீட்டிற்கு அருகிலுள்ள கலைக்கூடத்தின் திறப்பு விழாவில் பங்கேற்றதற்கு பின் பிடல் காஸ்ட்ரோ பொது இடத்தில் தோன்றாதிருந்து வருவதால் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அவரது புகைப்படங்கள் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பனவாக உள்ளன.

No comments:
Post a Comment