சுவீடன் நிறுவனமொன்று தனது நிறுவனத்தின் பாதுகாப்பு செயற்கிரமங்களை அதிகரிக்கும் மூலமாக ஊழியர்களுக்கு அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்கு பதிலாக அவர்களது கையில் தோலின் கீழ் கணினி சிப்களை பொருத்தும் செயற்கிரமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேற்படி வானொலி அலைவரிசை அடையாள கணினி சிப்பானது அரிசி தானியமொன்றின் அளவானதாகும். இந்த கணினி சிப்பைப் பயன்படுத்தி பணியாளர்கள் அலுவலக கதவுகளை திறக்கவும் பிரதியெடுக்கும் இயந்திரங்களை பயன்படுத்தவும் முடியும்.
எபிசென்டர் நிறுவனத்தின் உயர் தொழில்நுட்ப அலுவலகத்தில் பணியாற்றும் 400 ஊழியர்களுக்கு மேற்படி கணினி சிப்கள் சோதனை முயற்சியாக வழங்கப்பட்டுள்ளன. இந்த சிப்களை பயன்படுத்தி பஸ் கட்டணத்தை செலுத்துவதும் உணவை வாங்குவதும் விரைவில் சாத்தியமாகும் என எபிசென்டர் நிறுவனம் கூறுகின்றது.

No comments:
Post a Comment